இன்றைய நாள் குடும்பம், உத்தியோகம், தொழில், வியாபாரம் மற்றும் உறவுகள் எனப் பல்வேறு அம்சங்களில் 12 இராசிக்காரர்களுக்கும் எவ்வாறு அமையப் போகிறது என்பதைப் பார்ப்போம்.
மேஷ இராசி : குடும்பக் கடமைகளுக்கான செலவுகள் வரும். வழக்கத்தைவிட அதிகம் ஓய்வெடுக்கவும். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரம், மேன்மையடையும்.
ரிஷப இராசி : இன்று அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக இருக்கும். வெளி உணவுகளை கூடுமானவரை தவிர்க்கவும். கடன் தவணை கட்ட சிறந்த நாள். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மிதுன இராசி : மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரவும். உடல் நலத்தில் கவனம் தேவை. புது வாகனம் வாங்கும் எண்ணம் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கடக இராசி : அன்றாட பணிகளை ஒழுங்காக முடிப்பது நல்லது. குழப்பமான விஷயத்திற்கு நல்ல தீர்வு வரும். இரவு தாமதமாக பயணம் செய்வதை தவிர்க்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
சிம்ம இராசி : தியானத்தால் மனம் நிம்மதியடையும். பெரியோர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
கன்னி இராசி : நீண்ட கால இலக்குகளைத் அடைய திட்டமிடவும். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். பாலிய நண்பர்கள் பெரிதும் உதவுவர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
துலாம் இராசி : மனதில் உயர்வான எண்ணங்கள் வரும். வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களின் அன்பு, பாசம் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
விருச்சிக இராசி : அருகாமையில் இருப்பவர்களின் ஆதரவு பெருகும். திருமண முயற்சி சாதகமான பலனை தரும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
தனுசு இராசி : அலைபேசி வழியில் நல்ல தகவல் ஒன்று வரும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.
மகர இராசி : எதிர்காலம் குறித்த நம்பிக்கை அதிகரிக்கும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். ஒதுங்கி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கும்ப இராசி : குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தள்ளி போன வேலைகளை தைரியமாக தொடங்கவும். காரிய தடை நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
மீன இராசி : அவசர முடிவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். வாகனங்களில் நிதானமாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
குறிப்பு: இவை பாரம்பரிய ஜோதிட அடிப்படையிலான பொதுவான பலன்கள் மட்டுமே. முக்கியமான வாழ்க்கை, நிதி அல்லது உடல்நல முடிவுகளை எடுக்கும்போது நடைமுறைத் தகவல்களையும் நிபுணர் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்ளவும்.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!