அநுராதபுரம் ருவன்வெலி மகா சேய வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற வன்முறை மோதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரையும் பிணையில் விடுவிக்க அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த 11 பேரும் இன்று (26) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த நவம்பர் 12ஆம் திகதி, நீதிமன்ற உத்தரவை மீறி ருவன்வெலி மகா சேய வளாகத்திற்கு அருகில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 11 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!