செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 03:51 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
இலங்கை

வானில் நிகழப்போகும் பிரம்மாண்ட அதிசயம்! அடுத்தடுத்து 4 சூப்பர் மூன்கள்! அபூர்வ காட்சியை எந்த நேரத்தில் பார்க்கலாம்?

ஆயம் செய்திப்பிரிவு 24 நவம்பர் 2026, மு.ப 01:13 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
வானில் நிகழப்போகும் பிரம்மாண்ட அதிசயம்! அடுத்தடுத்து 4 சூப்பர் மூன்கள்! அபூர்வ காட்சியை எந்த நேரத்தில் பார்க்கலாம்?

வானியல் ஆர்வலர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், நவம்பர் 24ஆம் திகதி தோன்றும் ‘பீவர் மூன்’ (Beaver Moon) முழுநிலவைத் தொடர்ந்து, அடுத்தடுத்து நான்கு சூப்பர் மூன் நிகழ்வுகள் வானில் தோன்றவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலவு தனது நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும் காலத்தில் ஏற்படும் பௌர்ணமி, ‘சூப்பர் மூன்’ என அழைக்கப்படுகிறது. இதன்போது, வழக்கமான முழுநிலவை விட நிலவு சுமார் 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் அதிக பிரகாசமாகவும் காட்சியளிக்கும்.

இந்த வரிசையில், 2026 நவம்பர் 24ஆம் திகதி தோன்றும் பீவர் மூன் முழுநிலவு, பூமியிலிருந்து சுமார் 360,768 கிலோமீற்றர் தொலைவில் காணப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த மாதங்களில் மேலும் மூன்று சூப்பர் மூன் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

- 2026 டிசம்பர் 23/24 – குளிர்கால முழுநிலவு (Cold Moon)

- 2027 ஜனவரி 22 – ஓநாய் முழுநிலவு (Wolf Moon)

- 2027 பெப்ரவரி 20 – பனி முழுநிலவு (Snow Moon)

சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் கிழக்கு அடிவானத்தில் நிலவு உதிக்கும் நேரத்தில், இந்த சூப்பர் மூன் நிகழ்வுகளை மிகத் தெளிவாகவும் பிரம்மாண்டமாகவும் அவதானிக்க முடியும் என வானியல் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கமான முழுநிலவை விடப் பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றும் இந்த நிலவு நிகழ்வுகள், வானியல் ஆர்வலர்களுக்கு சிறப்பான வானியல் அனுபவமாக அமையவுள்ளன.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!