செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 03:51 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
இலங்கை

நாளை பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு! 75 மி.மீ.க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

ஆயம் செய்திப்பிரிவு 23 நவம்பர் 2026, பி.ப 05:07 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
நாளை பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு! 75 மி.மீ.க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

2026 நவம்பர் 24ஆம் திகதி நாளைய தினம், நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

2026 நவம்பர் 24ஆம் திகதி நாளைய தினம், நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


இதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


குறிப்பாக, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், அதிகாலை வேளையில் மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.


இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!