இன்றைய நாள் குடும்பம், உத்தியோகம், தொழில், வியாபாரம் மற்றும் உறவுகள் எனப் பல்வேறு அம்சங்களில் 12 இராசிக்காரர்களுக்கும் எவ்வாறு அமையப் போகிறது என்பதைப் பார்ப்போம்.
மேஷ இராசி : விஐபிகளின் அறிமுகத்தால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாரத செலவுகளை சமாளிக்க முடியும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
ரிஷப இராசி : வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சற்று தாமதமாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
மிதுன இராசி : குடும்ப செல்வாக்கு வெகுவாக உயரும். புதிய நட்பு வட்டம் உருவாகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
கடக இராசி : ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நீண்ட நாள் கனவுகளும் நிறைவேறும். திருமணம் காரியம் விரைவில் கைகூடும். உத்தியோகத்தில் வேலை பளு குறையும்.
சிம்ம இராசி : குடும்பத்தில் அன்பும், ஆதரவும் பெருகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. இரவு நேர வாகன பயணங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும்.
கன்னி இராசி : திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளால் மனம் மகிழும். பயணங்களால் அலைச்சலும், செலவுகளும் வரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். புது தொழில் யோகம் அமையும்.
துலாம் இராசி : அருகாமையில் இருப்பவர்களின் ஆதரவு பெருகும். கடன் பிரச்சனை ஓரளவு குறையும். எதிரிகளும் உங்களை விட்டு விலகியே நிற்பர். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
விருச்சிக இராசி : குடும்பத்திற்கு வேண்டியதை சிறப்பாகச் செய்து தர முடியும். நண்பர்கள் நல்ல ஒத்துழைப்பை தருவர். காரிய அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும்.
தனுசு இராசி : எந்தச் சூழ்நிலையிலும் பதறாமல் பொறுமையாக இருக்கவும். உடல் உபாதைகள் நீங்கும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மகர இராசி : குடும்பத்தின் மீது அதிக பாசம் ஏற்படும். மன சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். பழைய வாகனத்தை சீர் செய்ய வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கும்ப இராசி : திட்டமிட்ட காரியங்கள் நல்லவிதமாக நடக்கும், பிரியமானவர்களின் அன்பு கிடைக்கும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மீன இராசி : முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் தர வேண்டாம். உறவினர்களிடம் கேட்ட நிதி உதவி நிச்சயம் கிடைக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
குறிப்பு: இவை பாரம்பரிய ஜோதிட அடிப்படையிலான பொதுவான பலன்கள் மட்டுமே. முக்கியமான வாழ்க்கை, நிதி அல்லது உடல்நல முடிவுகளை எடுக்கும்போது நடைமுறைத் தகவல்களையும் நிபுணர் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்ளவும்.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!