இன்றைய நாள் குடும்பம், உத்தியோகம், தொழில், வியாபாரம் மற்றும் உறவுகள் எனப் பல்வேறு அம்சங்களில் 12 இராசிக்காரர்களுக்கும் எவ்வாறு அமையப் போகிறது என்பதைப் பார்ப்போம்.
மேஷ இராசி : குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க முடியும். உடல் நலனில் கவனம் தேவை. பெற்றோர்கள் எப்போதும் பக்கபலமாக இருப்பர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
ரிஷப இராசி : குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். பயன் தராத காரியங்களில் ஈடுபட வேண்டாம். இரவு நேர வாகன பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மிதுன இராசி : பொது நல காரியங்களில் ஈடுபாடு வரும். பிரியமானவர்களின் வருகை உற்சாகத்தை தரும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கடக இராசி : எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். திருமண காரியம் விரைவில் கைகூடும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
சிம்ம இராசி : புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
கன்னி இராசி : குடும்ப நலம் மேலோங்கும். எதிர்பார்ப்புகள் எதுவாகினும் அது நிறைவேறும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும் உத்தியோக மாற்றம் ஏற்படும்.
துலாம் இராசி : எதிர்காலம் பற்றிய ஒரு பயம் இருக்கும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். கணவன், மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
விருச்சிக இராசி : தள்ளி போன வாய்ப்புகள் தேடி வரும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். நீண்ட தூர பயணங்களை அறவே தவிர்க்கவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
தனுசு இராசி : தடைப்பட்ட வேலைகள் சீக்கிரத்தில் முடியும். பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை. நண்பர்களால் சில மன சங்கடங்கள் வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மகர இராசி : மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். அருகாமையில் இருப்பவர்களின் ஆதரவு பெருகும். பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
கும்ப இராசி : ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் வரும். வெளியில் உண்பதை குறைத்து கொள்ளவும். வாகனங்களில் நிதானமாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மீன இராசி : விரும்பிய பொருட்களை வாங்க முடியும். பயணங்கள் திட்டமிட்டபடி சிறப்பாக அமையும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
குறிப்பு: இவை பாரம்பரிய ஜோதிட அடிப்படையிலான பொதுவான பலன்கள் மட்டுமே. முக்கியமான வாழ்க்கை, நிதி அல்லது உடல்நல முடிவுகளை எடுக்கும்போது நடைமுறைத் தகவல்களையும் நிபுணர் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்ளவும்.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!