செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 03:59 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
Cinema

ரஜினி - அஜித் சந்திப்பு முதல் எம்.எஸ். தோனி வரை... 2ஆவது நாளாக களைகட்டிய அனிருத் - காவ்யா மாறன் திருமண கொண்டாட்டம்!

ஆயம் செய்திப்பிரிவு 23 நவம்பர் 2026, மு.ப 01:02 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
ரஜினி - அஜித் சந்திப்பு முதல் எம்.எஸ். தோனி வரை... 2ஆவது நாளாக களைகட்டிய அனிருத் - காவ்யா மாறன் திருமண கொண்டாட்டம்!

சென்னையில் நேற்று (22) நடைபெற்ற இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்வில், நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் குமார் உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது கவனம் ஈர்த்து வருகின்றன.

குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் ஆகியோர் சந்தித்துப் பேசிக்கொண்டு, ஒருவரையொருவர் அன்புடன் கட்டியணைத்துக்கொண்ட நெகிழ்ச்சியான தருணங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், திருமணக் கொண்டாட்டங்கள் நேற்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தன.

இதில் நடிகர் சிலம்பரசன், இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ். தோனி, நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முன்னாள் தலைவருமான கேன் வில்லியம்சன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் விளையாட்டு நட்சத்திரங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

குறிச்சொற்கள்: #கோலிவுட்
ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!