திரையுலகப் பிரபலங்களின் விவாகரத்துச் செய்திகள் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பேசுபொருளாகி வரும் நிலையில், ஹிந்தி நடிகர் சைப் அலி கானின் புதிய பச்சை குத்தல் (Tattoo) தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்துள்ளன.
தனுஷ் – ஐஸ்வர்யா, சமந்தா – நாக சைதன்யா மற்றும் அண்மையில் ஜீ.வி. பிரகாஷ் – சைந்தவி ஆகியோரின் விவாகரத்துச் செய்திகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.
இந்நிலையில், சைப் அலி கான் முன்னர் தனது இடது கையில் மனைவி கரீனா கபூரின் பெயரைப் பச்சை குத்தியிருந்தார். ஆனால், தற்போது அந்தப் பெயருக்குப் பதிலாக திரிசூலம் போன்ற வடிவிலான புதிய பச்சை குத்தல் காணப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, கரீனாவின் பெயரை அவர் நீக்கியதற்கான காரணம் என்ன, இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளனவா, விவாகரத்து செய்யத் திட்டமிட்டுள்ளனரா என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
எனினும், பச்சை குத்தலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தம்பதியினரின் விவாகரத்தைக் குறிக்கிறது என்பதற்கான எந்தவொரு உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
அதேவேளை, திரைப்படமொன்றில் ஏற்கும் கதாபாத்திரத்திற்காக இந்தப் பச்சை குத்தல் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கருத்துகளும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சைப் அலி கான் – கரீனா கபூர் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!