புதன்கிழமை, 25 நவம்பர் 2026 | 04:37 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
சினிமா

"கீமோதெரபி கடினமானதுதான், அதைவிட நான் வலிமையானவள்!" புற்றுநோய் சிகிச்சையில் நடிகை உமா சங்கரி பகிர்ந்த உருக்கமான பதிவு!

ஆயம் செய்திப்பிரிவு 21 நவம்பர் 2026, பி.ப 12:08 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
"கீமோதெரபி கடினமானதுதான், அதைவிட நான் வலிமையானவள்!" புற்றுநோய் சிகிச்சையில் நடிகை உமா சங்கரி பகிர்ந்த உருக்கமான பதிவு!

தமிழ் சினிமாவில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு தங்கையாக நடித்துப் பிரபலமான நடிகை உமா சங்கரி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ் சினிமாவில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு தங்கையாக நடித்துப் பிரபலமான நடிகை உமா சங்கரி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘வீரநடை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை உமா சங்கரி. பின்னர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘சொக்கத்தங்கம்’ திரைப்படத்தில் அவருக்குத் தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.


தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள இவர், கடந்த 2006ஆம் ஆண்டு துஷ்யந்த் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.


இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் நடிகை உமா சங்கரிக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.


தற்போதைய உடல்நிலை குறித்து உருக்கமான பதிவு!


தனது உடல்நிலை மற்றும் சிகிச்சை தொடர்பாக நடிகை உமா சங்கரி அண்மையில் சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.


அதில், கீமோதெரபி சிகிச்சைகள் மிகவும் கடினமானதாக இருந்தாலும், அதைவிடத் தான் வலிமையானவள் எனக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள ஊசி மருந்து சிகிச்சைகள் தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை நோக்கிய முதல் படி என்றும், மிகுந்த தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


புற்றுநோய் சிகிச்சையின் கடினமான சூழ்நிலையிலும் மனம் தளராமல் நம்பிக்கையுடன் போராடி வரும் உமா சங்கரியின் மனவலிமையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.


அவரது பதிவைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் விரைவில் பூரண குணமடைய வேண்டி பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

குறிச்சொற்கள்: #கோலிவுட்
ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!