பிரபல இந்திய நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன், அமெரிக்காவில் நடைபெற்ற பல்கலைக்கழக அளவிலான நீச்சல் போட்டியில் புதிய சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் நடைபெற்ற ‘ஒஹியோ ஸ்டேட் இன்விடேஷனல்’ (Ohio State Invitational) நீச்சல் போட்டியில், ஆண்களுக்கான 800 யார்டு ஃப்ரீஸ்டைல் ரிலே (800-yard freestyle relay) பிரிவில் வேதாந்த் மாதவன் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட அணி பங்கேற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், வேதாந்த் இடம்பெற்ற அணி 6 நிமிடங்கள் 24.82 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய சாதனையைப் பதிவு செய்தது.
இதன் மூலம், கடந்த 2025ஆம் ஆண்டு இதே பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
வேதாந்த் மாதவனின் இந்தச் சாதனைக்கு விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!