இன்றைய நாள் குடும்பம், உத்தியோகம், தொழில், வியாபாரம் மற்றும் உறவுகள் எனப் பல்வேறு அம்சங்களில் 12 இராசிக்காரர்களுக்கும் எவ்வாறு அமையப் போகிறது என்பதைப் பார்ப்போம்.
மேஷ இராசி : குடும்பத் தேவைகளையும், செலவுகளையும் சமாளிக்க முடியும். பிரபலங்கள் அறிமுகமாவர். தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உத்தியோகத்தில் ஆதரவு பெருகும்.
ரிஷப இராசி : உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உடற்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
மிதுன இராசி : புதிய திட்டங்களைத் தற்போதைக்குப் தொடங்க வேண்டாம். பிரியமானவர்களைச் சந்திக்கும் அரிய வாய்ப்பு கிட்டும். சில கடன் தொந்தரவுகள் இருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.
கடக இராசி : எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். அருகாமையில் இருப்பவர்களின் ஆதரவு பெருகும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.
சிம்ம இராசி : தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எடுக்கும் முடிவுகளில் அவசரம் வேண்டாம். விலகிச் சென்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். புது தொழில் ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
கன்னி இராசி : மனக்குழப்பம் நீங்கி மன அமைதியும், தெளிவும் பெரும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.
துலாம் இராசி : பொருளாதார நிலை உயரும். அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பெரியோர்களின் அன்பு, ஆதரவும் கிட்டும். புது தொழில், யோகம் அமையும்.
விருச்சிக இராசி : குடும்பத்தில் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். அவசர காலங்களில் உறவினர்கள் உதவி செய்வர். தொல்லை தந்தவர்கள் தானாக விலகுவர். உத்தியோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
தனுசு இராசி : புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும். உடல் ஆரோக்கியம் மேன்மை பெரும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்தியோக மாற்றம் ஏற்படும்.
மகர இராசி : சமூகத்தில் உயர்ந்த மதிப்பை பெற முடியும். நண்பர்கள் நல்வழி காட்டுவர். காரிய தடைகள், தாமதங்கள் விலகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கும்ப இராசி : வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மீன இராசி : திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிக்க முடியும். மனசாட்சிக்கு முரணான செயல்களில் ஈடுபட வேண்டாம். வாகனங்களில் நிதானமாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
குறிப்பு: இவை பாரம்பரிய ஜோதிட அடிப்படையிலான பொதுவான பலன்கள் மட்டுமே. முக்கியமான வாழ்க்கை, நிதி அல்லது உடல்நல முடிவுகளை எடுக்கும்போது நடைமுறைத் தகவல்களையும் நிபுணர் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்ளவும்.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!