புதன்கிழமை, 25 நவம்பர் 2026 | 05:37 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
இலங்கை

தலைநகரத்தை விட யாழ்ப்பாணத்தில் காற்று மிக மோசம்! இலங்கையை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு!

க. இளங்கோவன் 18 நவம்பர் 2026, மு.ப 10:44 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
தலைநகரத்தை விட யாழ்ப்பாணத்தில் காற்று மிக மோசம்! இலங்கையை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு!

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.

இன்று (நவம்பர் 18) காலை 7.30 மணியளவில் வெளியிடப்பட்ட காற்றுத் தரச் சுட்டெண் (AQI) அறிக்கையின்படி, யாழ்ப்பாணத்தில் அதிகபட்சமாக 186 AQI பதிவாகியுள்ளது.

அதிக காற்றுத் தரச் சுட்டெண் பதிவான பகுதிகள்:


- யாழ்ப்பாணம் – 186

- கிளிநொச்சி – 170

- பத்தரமுல்லை – 166

- அநுராதபுரம் – 165

- சிலாபம் – 164

- திருகோணமலை – 156

- அக்கரைப்பற்று – 154


மேலும், எல்ல பகுதியில் 101 AQI பதிவாகியுள்ளதுடன், இரத்தினபுரியில் 96 AQI பதிவாகியுள்ளது. இந்நிலையில், காற்று மாசுபாடு அதிகமாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றின் தரம் மோசமடைந்துள்ள பகுதிகளில் முகக்கவசம் அணிவதுடன், தேவையற்ற வெளிப்புற நடமாட்டங்களைத் தவிர்ப்பதும் ஆரோக்கிய பாதிப்புகளைக் குறைக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

க. இளங்கோவன்

க. இளங்கோவன்

முதன்மை ஆய்வாளர்

இலங்கை அரசியல் மற்றும் சர்வதேச விவகார ஆய்வாளர்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!