அநுராதபுரம் ருவன்வெலி மகாசாய தூபிக்கு அருகில் சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில், பௌத்த தேரர்கள் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட இராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!