செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 04:23 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
Political

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விஜய் - சங்கீதா தம்பதியின் புகைப்படங்கள்! காவ்யா - அனிருத் வரவேற்பில் சுவாரஷ்யம்!

ஆயம் செய்திப்பிரிவு 22 நவம்பர் 2026, மு.ப 01:10 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விஜய் - சங்கீதா தம்பதியின் புகைப்படங்கள்! காவ்யா - அனிருத் வரவேற்பில் சுவாரஷ்யம்!

தமிழக அரசியல், திரையுலகம் மற்றும் கிரிக்கெட் உலகின் முக்கியப் பிரமுகர்கள் ஒன்றுகூடிய நிலையில், காவ்யா கலாநிதி மாறன் – இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா சென்னையில் நேற்று (21) கோலாகலமாக நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறன், பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரைத் திருமணம் செய்துகொண்டதைத் தொடர்ந்து இந்த வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த நவம்பர் 11ஆம் திகதி கிரேக்கத்தில் நெருங்கிய குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், சென்னையில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் பங்கேற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், கிரிக்கெட் உலகைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா பங்கேற்றதாகக் கூறப்படும் புகைப்படங்கள், காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன.

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு விழா, அரசியல், சினிமா மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் சங்கமித்த நட்சத்திர நிகழ்வாக அமைந்துள்ளது.

குறிச்சொற்கள்: #கோலிவுட்
ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!