தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷாவின் பெயரில், ‘இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை’ என்ற புதிய அமைப்பு திருநெல்வேலியில் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தப் பேரவை செயல்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதன் அதிகாரப்பூர்வ இலச்சினையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த இலச்சினையில் நடிகை த்ரிஷாவின் புகைப்படத்துடன், ‘பதவிக்காக அல்ல; தமிழக மக்களின் உரிமைக்காக’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், தனது பெயரில் பேரவை தொடங்கப்பட்டுள்ளமை தொடர்பாக நடிகை த்ரிஷா தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ ஒப்புதல் அல்லது விளக்கம் எதுவும் வெளியிடப்பட்டதாக உறுதிப்படுத்தப்படவில்லை.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!