புதன்கிழமை, 25 நவம்பர் 2026 | 04:45 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
உலகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மேலும் 14 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது.

க. இளங்கோவன் 25 நவம்பர் 2026, மு.ப 07:25 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
trump trump

சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு புதிய வரிகளை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. புதிய வரி விகிதங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், உலக வர்த்தகத்தில் பதற்றம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மேலும் 14 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது.


அமெரிக்க உற்பத்தியாளர்களைப் பாதிக்கும் வகையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அரசாங்கங்கள் வழங்கும் மானியங்களைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.


ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், இந்தியா உள்ளிட்ட நாடுகளும் இந்த வரி உயர்வில் இலக்காகியுள்ளன.


ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு 15% அல்லது அதற்கும் குறைவான வரி விதிக்கப்படலாம்.


வியட்நாம் மற்றும் இந்தியாவுக்கு அதிக வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.


சீனாவுக்கு மற்ற நாடுகளைவிட அதிக வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏற்கனவே தனியான தேசிய பாதுகாப்பு வரிகள் விதிக்கப்பட்டுள்ள எஃகு, அலுமினியம் மற்றும் வாகனப் பொருட்கள் இந்தப் புதிய நடவடிக்கையிலிருந்து விலக்கப்படலாம்.


புதிய வரி விகிதங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வாரத்திலேயே அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) இதன் முடிவுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அமெரிக்காவின் இந்த முடிவு உலக வர்த்தகத்தில் பதற்றம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

க. இளங்கோவன்

க. இளங்கோவன்

முதன்மை ஆய்வாளர்

இலங்கை அரசியல் மற்றும் சர்வதேச விவகார ஆய்வாளர்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!