செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 04:00 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
உலகம்

இனி சொந்தத்திற்குள் திருமணம் செய்ய முடியாதா? உச்சநீதிமன்றம் அதிரடி!

ஆயம் செய்திப்பிரிவு 23 நவம்பர் 2026, மு.ப 10:21 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
இனி சொந்தத்திற்குள் திருமணம் செய்ய முடியாதா? உச்சநீதிமன்றம் அதிரடி!

நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் நடைபெறும் திருமணங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டுவருவது குறித்து இந்திய மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் நடைபெறும் திருமணங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டுவருவது குறித்து இந்திய மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.


இத்தகைய திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணு நோய்கள் மற்றும் பிறவிக் குறைபாடுகள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாகக் குறிப்பிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்தபோதே நீதிமன்றம் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளது.


அதேவேளை, திருமணம் என்பது தனிநபர் விருப்பம் சார்ந்த விடயம் என்பதால், அதனை நீதிமன்றத்தால் நேரடியாகக் கட்டுப்படுத்த முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


எனவே, நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!