செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 03:59 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
உலகம்

நிஜமா? சிலையா? ஊட்டியில் முதலமைச்சர் விஜய்யைப் பார்த்து மிரண்டு போன சுற்றுலாப் பயணிகள்!

ஆயம் செய்திப்பிரிவு 23 நவம்பர் 2026, மு.ப 11:33 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
நிஜமா? சிலையா? ஊட்டியில் முதலமைச்சர் விஜய்யைப் பார்த்து மிரண்டு போன சுற்றுலாப் பயணிகள்!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள படகு இல்லத்தில், சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் சர்வதேச மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள படகு இல்லத்தில், சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் சர்வதேச மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற பிரபலங்களின் உருவங்கள் மெழுகினால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.


பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின், அன்னை தெரேசா, நடிகர்கள் ரஜினிகாந்த், மம்மூட்டி, மோகன்லால் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் என 20-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் மெழுகு சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


ஊட்டியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச மெழுகு சிலை அருங்காட்சியகம் தற்போது சமூக வலைத்தளங்களிலும் கவனம் ஈர்த்து வருகிறது.


ஊட்டியின் குளிர்ச்சியான காலநிலை காரணமாக, இங்கு வைக்கப்பட்டுள்ள மெழுகு சிலைகள் உருகாமல் திடமான நிலையில் காணப்படுவதுடன், பார்ப்பதற்கு மிகவும் தத்ரூபமாகவும் காட்சியளிக்கின்றன.


இதனால், ஊட்டி படகு இல்லத்திற்கு படகு சவாரி செய்ய வரும் சுற்றுலாப் பயணிகள், இந்த அருங்காட்சியகத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டு, மெழுகு சிலைகளுடன் புகைப்படங்கள் எடுத்துச் செல்கின்றனர்.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!