புதன்கிழமை, 25 நவம்பர் 2026 | 04:46 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
உலகம்

சவுதி அரேபியாவில் ஹூதி தாக்குதல்

க. இளங்கோவன் 25 நவம்பர் 2026, மு.ப 07:34 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
சவுதி அரேபியாவில் ஹூதி தாக்குதல்

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் வானளாவிய கட்டடம் ஒன்றின் மீது ஹூதி கிளர்ச்சிப் படையினர் நடத்தியதாகத் தெரிவிக்கப்படும் தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். ஆரம்பகட்ட தகவல்களின்படி இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை.

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் உள்ள வானளாவிய கட்டடம் ஒன்றின் மீது ஹூதி கிளர்ச்சிப் படையினர் நடத்திய தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளதாக சவுதி அரேபிய சிவில் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் நான்கு எகிப்தியர்கள், மூன்று நேபாளர்கள், இரண்டு இந்தியர்கள் மற்றும் இரண்டு சவுதி அரேபியப் பிரஜைகள் அடங்குகின்றனர்.


குறித்த வானளாவிய கட்டடத்தில் சவுதி அரேபியாவின் இறையாண்மைச் சொத்து நிதியத்தின் (Sovereign Wealth Fund) தலைமையகம் அமைந்துள்ளது. இது சவுதி அரேபியாவின் மிக உயரமான கட்டடமாகும்.


சவுதி அரேபியாவுக்கும் யேமனின் ஹூதி இயக்கத்திற்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.


இதற்கிடையில், சவுதி அதிகாரிகள் வெளியிட்ட ஆரம்பகட்ட தகவல்களின்படி, காயமடைந்தவர்களில் இலங்கைப் பிரஜைகள் எவரும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

க. இளங்கோவன்

க. இளங்கோவன்

முதன்மை ஆய்வாளர்

இலங்கை அரசியல் மற்றும் சர்வதேச விவகார ஆய்வாளர்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!