உலகளாவிய வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2100ஆம் ஆண்டுக்குள் பூமியைத் தாக்கும் மின்னல்களின் எண்ணிக்கை 76% முதல் 140% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகப் புதிய ஆய்வொன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Earth's Future என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின்படி,
பூமியின் சராசரி வெப்பநிலையில் ஒவ்வொரு ஒரு டிகிரி செல்சியஸ் உயர்வுக்கும் மின்னல் தாக்குதல்களின் எண்ணிக்கை சுமார் 30% அதிகரிக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வெப்பமண்டல நாடுகளில் இந்த அதிகரிப்பின் தாக்கம் அதிகமாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெப்பநிலை உயர்வால் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் உருவாகும் சூழலை அதிகரிக்கக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தக் கணிப்புகள் எதிர்காலத்தில் மின்னல் தாக்குதல்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள், சொத்துச் சேதங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, வெப்பமண்டலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்னல் தொடர்பான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் இந்த ஆய்வு எடுத்துரைக்கிறது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!