வியாழக்கிழமை, 26 நவம்பர் 2026 | 09:49 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
உலகம்

வரிப் போர் தொடங்குகிறதா? இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு 25% வரை வரி!

ஆயம் செய்திப்பிரிவு 26 நவம்பர் 2026, மு.ப 12:59 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
வரிப் போர் தொடங்குகிறதா? இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு 25% வரை வரி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், உலக நாடுகளுக்கான புதிய இறக்குமதி வரி (Reciprocal Tariffs) விகிதங்களை முன்மொழிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், உலக நாடுகளுக்கான புதிய இறக்குமதி வரி (Reciprocal Tariffs) விகிதங்களை முன்மொழிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதன்படி, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு 25 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்க அமெரிக்கா முன்மொழிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


முக்கிய நாடுகளுக்கான முன்மொழியப்பட்ட இறக்குமதி வரி விபரங்கள் :


சீனா: ஏற்கனவே விதிக்கப்பட்ட வரிகளுடன் கூடுதலாக 20% வரி மற்றும் 40% இறக்குமதி வரி விதிக்க முன்மொழிவு.


வியட்நாம்: 35% இறக்குமதி வரி.


இந்தியா உள்ளிட்ட 7 நாடுகள்: 25% வரை இறக்குமதி வரி.


தென் கொரியா, வங்கதேசம், தைவான், ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஜப்பான், சுவிட்சர்லாந்து: 15% முதல் 20% வரை வரி முன்மொழிவு.


கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து: இறக்குமதி வரி உச்சவரம்பு 18% ஆக நிர்ணயிக்க முன்மொழிவு.


உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த புதிய வரி முன்மொழிவுகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பல நாடுகளின் ஏற்றுமதி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிச்சொற்கள்: #சர்வதேசம்
ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!