அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 2 ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) பங்குகளை இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின்படி, ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் இரண்டு பங்குகளில் ஒன்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடமிருந்தும், மற்றொன்று எலான் மஸ்கின் தனிப்பட்ட பங்கு இருப்பிலிருந்தும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 'ட்ரம்ப் கணக்குகள்' (Trump Accounts) திட்டத்தின் கீழ் இந்தப் பங்குகள் விநியோகிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் அமெரிக்காவில் உள்ள சுமார் 7.2 கோடி குழந்தைகள் பயனடையவுள்ளதுடன், மொத்தம் சுமார் 1.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு உலகளாவிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், குழந்தைகளின் எதிர்கால முதலீடு தொடர்பிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!