வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2026 | 10:37 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
வேலைநிறுத்தம் செய்தாலும் பலனில்லை! தொழிற்சங்கங்களுக்கு ஜனாதிபதி வைத்த செக்!
விளையாட்டு

"ஒரு அணியே அடிக்க முடியாத சிக்ஸர்களை 15 வயது சிறுவன் அடித்து விட்டான்!" – வாயடைத்துப் போன பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள்!

ஆயம் செய்திப்பிரிவு 26 நவம்பர் 2026, பி.ப 02:10 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
"ஒரு அணியே அடிக்க முடியாத சிக்ஸர்களை 15 வயது சிறுவன் அடித்து விட்டான்!" – வாயடைத்துப் போன பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள்!

15 வயதான இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான ஆசியக் கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் வெறும் 52 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து நிகழ்த்திய சாதனை, கிரிக்கெட் உலகில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

15 வயதான இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான ஆசியக் கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் வெறும் 52 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து நிகழ்த்திய சாதனை, கிரிக்கெட் உலகில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.


இந்த அதிரடி இன்னிங்ஸில் அவர் 28 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளை விளாசி எதிரணியை நிலைகுலையச் செய்தார்.


இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக இரட்டைச் சதம், 28 பந்துகளில் அதிவேக சதம், 40 பந்துகளில் 150 ஓட்டங்கள் எனப் பல சாதனைகளைத் தகர்த்தெறிந்தார்.


இந்நிலையில், இந்தியாவின் வளர்ந்து வரும் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்திலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவரது அதிரடி ஆட்டம் மற்றும் திறமை குறித்து பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.


பாகிஸ்தான் முன்னாள் வீரர்களின் கருத்துக்கள்:


பாசித் அலி: ஒரு முழு அணியால்கூட அடிக்க முடியாத அளவுக்கு சிக்ஸர்களை வைபவ் அடித்துள்ளார்.


முகமது வாசிம்: வைபவ் படைத்த சாதனையை அவரேதான் முறியடிக்க முடியும்.


தன்வீர் அகமது: அவரது திறமை அசாதாரணமானது. இருப்பினும், பலவீனமான பகுதிகளில் கூடுதல் பயிற்சி பெற வேண்டும்.


கம்ரான் அக்மல்: 15 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டுக்குத் தயாரான முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார்.


முகமது மொஹ்சின்: கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்லின் சாதனைகளையும் வைபவ் முறியடித்து வருவதாகப் பாராட்டியுள்ளார்.


வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் இந்திய ரசிகர்களை மட்டுமன்றி, பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


அவரது அபார திறமை, தொடர்ந்து முறியடித்து வரும் சாதனைகள் மற்றும் எதிர்கால சர்வதேச கிரிக்கெட் பயணம் குறித்த எதிர்பார்ப்புகள் தற்போது அதிகரித்து வருகின்றன.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!