வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2026 | 10:45 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
வேலைநிறுத்தம் செய்தாலும் பலனில்லை! தொழிற்சங்கங்களுக்கு ஜனாதிபதி வைத்த செக்!
விளையாட்டு

இரட்டிப்பு கொண்டாட்டம்! ஒரே நேரத்தில் இலங்கைக்கு 2 மெகா வெற்றிகள்!

ஆயம் செய்திப்பிரிவு 27 நவம்பர் 2026, மு.ப 08:44 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
இரட்டிப்பு கொண்டாட்டம்! ஒரே நேரத்தில் இலங்கைக்கு 2 மெகா வெற்றிகள்!

இலங்கை கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் முக்கியமான வெற்றிகளைப் பதிவு செய்து நாட்டுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கை கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் முக்கியமான வெற்றிகளைப் பதிவு செய்து நாட்டுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


ஆசியக் கிண்ண Rising Stars தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய A அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை A அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.


முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய A அணி 317 ஓட்டங்களைப் பெற்றது.


இதனையடுத்து 318 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணி, 41.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 318 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியைப் பதிவு செய்தது.


இலங்கை அணியின் வெற்றிக்கு லசித் குரூஸ்புள்ளே 118 ஓட்டங்களையும், சினெத் ஜயவர்தன 105 ஓட்டங்களையும் குவித்து வலுச்சேர்த்தனர்.


மேலும், நிஷான் மதுஷ்க ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களையும், பவன் ரத்நாயக்க ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.


இதன் மூலம் இலங்கை A அணி தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.


இதேவேளை, Women's Emerging Nations Trophy 2026 தொடரின் இறுதிப் போட்டியில் அயர்லாந்து அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை மகளிர் அணி சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.


குறித்த தொடரில் விளையாடிய எட்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தோல்வியின்றி கிண்ணத்தைக் கைப்பற்றியமை இலங்கை அணியின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.


இந்தத் தொடரில் விஷ்மி குணரத்னே 324 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்களைப் பெற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார்.


அதேபோல், சத்யா சந்தீபனி 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனைகளில் ஒருவராக இடம்பிடித்தார்.


இறுதிப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய சந்தீபனி 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகி விருதையும் தனதாக்கினார்.


இவ்வாறு இலங்கை ஆண்கள் A அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளதுடன், மகளிர் அணி சம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளமை இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரே நேரத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இரு அணிகளினதும் இந்தச் சாதனைகள் இலங்கை கிரிக்கெட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளன.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!