வைபவ் சூர்யவன்ஷி – லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக இரட்டைச் சதம்
========
இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, லிஸ்ட் ஏ (List A) கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டைச் சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
2026 ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் வீரர்கள் தொடரில் (Asia Cup Rising Stars) ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டியில் இன்று அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
வெறும் 52 பந்துகளில் இரட்டைச் சதத்தை எட்டிய அவர், இதற்கு முன்னர் சாட் போவ்ஸ் 103 பந்துகளில் படைத்திருந்த சாதனையை முறியடித்தார்.
15 வயதான சூர்யவன்ஷி ஆட்டமிழப்பதற்கு முன்னர் 53 பந்துகளில் 204 ஓட்டங்களைக் குவித்தார்.
அவரது அதிரடி ஆட்டத்தில்:
- 28 ஆறு ஓட்டங்கள்
- 7 நான்கு ஓட்டங்கள் அடங்கியிருந்தன.
இந்த நிலையில், வெறும் 28 பந்துகளில் சதமடித்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகச் சதத்திற்கான உலக சாதனையையும் அவர் படைத்தார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக இரட்டைச் சதங்கள்
1. வைபவ் சூர்யவன்ஷி (இந்தியா ஏ) – 52 பந்துகள்
2. சாட் போவ்ஸ் (கேன்டர்பரி) – 103 பந்துகள்
3. என். ஜெகதீசன் (தமிழ்நாடு) – 114 பந்துகள்
4. டிராவிஸ் ஹெட் (தெற்கு அவுஸ்திரேலியா) – 114 பந்துகள்
5. ஹாரி புரூக் (இங்கிலாந்து) – 114 பந்துகள்
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!