இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து ஆப்பிரிக்காவின் சோமாலியா நாடு வரையிலான சுமார் 5,700 கிலோமீற்றர் தூரத்தை, 101 மணி நேரம் இடைவிடாமல் பறந்து 'அலாங்' (Alang) என்ற இளம் பெண் அமூர் வல்லூறு சாதனை படைத்துள்ளது.
சுமார் 150 கிராம் எடை மட்டுமே கொண்ட இந்தப் பறவை, தனது நீண்ட பயணத்தின் போது ஓய்வெடுக்கவோ, உணவு உட்கொள்ளவோ எங்கும் தரையிறங்காமல், அரபிக்கடல் வழியாகப் பயணித்து இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளதாக பறவைகள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வளவு சிறிய உடல் எடையைக் கொண்ட ஒரு பறவை, 101 மணி நேரம் தொடர்ச்சியாகப் பறந்து ஆயிரக்கணக்கான கிலோமீற்றர் தூரத்தைக் கடந்திருப்பது வியப்பையும், பறவைகளின் வியக்கத்தக்க இடம்பெயர்வு திறனையும் வெளிப்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!