சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (22) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
இதற்கமைய, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 3,524.8 அமெரிக்க டொலராகக் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 40.99 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலை குறைவடைந்து காணப்படுகின்றது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சியின் தாக்கமாக இலங்கையிலும் தங்கத்தின் விலை மேலும் குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!