செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதில் உலகளாவிய ரீதியில் பாரிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அடுத்த ஆண்டு AI துறையில் பல நூறு பில்லியன் டொலர் அளவிலான நிதி நெருக்கடி ஏற்படக்கூடும் என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.
AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்குத் தேவையான சிப்கள் (Chips), தரவு மையங்கள் (Data Centers) உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு பல நூறு பில்லியன் டொலர்கள் தேவைப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
AI துறையில் அதிகரித்து வரும் முதலீட்டுத் தேவைகள் மற்றும் அதற்கான பாரிய செலவினங்கள் எதிர்காலத்தில் நிதிச் சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் எலான் மஸ்க்கின் எச்சரிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!