புவேர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’ (Miss Universe 2026) அழகிப் போட்டியில், புவேர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த ஜெனிஃபர் பாரெட்டோ (Jennifer Barreto) வெற்றி பெற்று மகுடம் சூடியுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதிச் சுற்றில், தனது அழகு மற்றும் திறமையால் நடுவர்களைக் கவர்ந்த ஜெனிஃபர் பாரெட்டோ முதலிடத்தைப் பெற்று மிஸ் யுனிவர்ஸ் 2026 பட்டத்தைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
வெற்றியாளருக்கு மகுடம் சூட்டும் நிகழ்வில், கடந்த 2025ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற மெக்சிகோவைச் சேர்ந்த ஃபாத்திமா போஷ், ஜெனிஃபர் பாரெட்டோவிற்கு மகுடம் சூட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.
சொந்த நாட்டில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் ஜெனிஃபர் பாரெட்டோ வெற்றி பெற்றிருப்பது புவேர்ட்டோ ரிக்கோ மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!