2027ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2027) தொடருக்கான வீரர்கள் ஏலம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி காலை 11 மணிக்கு கோவாவில் வீரர்கள் ஏலம் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அணிகளால் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் ஏலத்தின் மூலம் 10 அணிகளும் இணைந்து மொத்தமாக 66 வீரர்களைத் தெரிவு செய்ய வேண்டியுள்ளது.
மேலும், அனைத்து அணிகளிடமும் சேர்த்து மொத்தமாக 297.25 கோடி இந்திய ரூபாய் ஏலத்திற்கான மீதித் தொகையாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், எதிர்வரும் வீரர்கள் ஏலத்தில் பல்வேறு அணிகளுக்கிடையே முக்கிய வீரர்களைப் பெறுவதற்கான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!