2027ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடருக்கு முன்னதாக, இலங்கை வீரர்களின் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தசுன் ஷானக்க, இஷான் மலிங்க மற்றும் நுவான் துஷார ஆகிய மூன்று இலங்கை வீரர்கள் முறையே ராஜஸ்தான் ரோயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மதீஷ பத்திரண, டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க, பெதும் நிஸ்ஸங்க மற்றும் கமிந்து மெண்டிஸ் உள்ளிட்ட ஆறு இலங்கை வீரர்கள் அவர்களது அணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், எதிர்வரும் ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் இந்த ஆறு இலங்கை வீரர்களும் புதிய அணிகளுடன் இணைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரை முன்னிட்டு அணிகள் தங்களது வீரர் குழாம்களை மறுசீரமைத்து வருகின்ற நிலையில், இலங்கை வீரர்களின் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!