இன்றைய நாள் குடும்பம், உத்தியோகம், தொழில், வியாபாரம் மற்றும் உறவுகள் எனப் பல்வேறு அம்சங்களில் 12 இராசிக்காரர்களுக்கும் எவ்வாறு அமையப் போகிறது என்பதைப் பார்ப்போம்.
மேஷ இராசி : தனிப்பட்ட ரகசியங்களை வெளியில் பகிர வேண்டாம். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வர். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
ரிஷப இராசி : விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். தூர பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
மிதுன இராசி : அருகாமையில் இருப்பவர்களின் ஆதரவு பெருகும். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
கடக இராசி : புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும் தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
சிம்ம இராசி : குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். பெரியோர்கள் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வதந்திகள், விமர்சனங்களை புறக்கணிக்கவும். உத்தியோக மாற்றம் ஏற்படும்.
கன்னி இராசி : திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக முடிக்க முடியும். வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். எதிரி தொல்லை நீங்கும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
துலாம் இராசி : புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை. விலகி நின்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர்.
விருச்சிக இராசி : குடும்ப எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.
தனுசு இராசி : குடும்பத்தில் பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. சேமிப்பிற்கு எதிர்பாராத செலவுகள் வரும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
மகர இராசி : எந்த ஒரு செயலையும் நன்கு யோசித்த பின் தொடங்கவும். காரிய அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கும்ப இராசி : மனத்துயரங்கள் அகன்று நிம்மதி உண்டாகும். பெரிய தொகை பரிமாற்றங்களில் கவனம் தேவை. திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
மீன இராசி : குடும்பத்தில் சுப காரிய செலவுகள் வரும். பிரியமானவர்கள் அன்பு மழை பொழிவர். வாகன பயணங்களில் பொறுமை அவசியம். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும்.
குறிப்பு: இவை பாரம்பரிய ஜோதிட அடிப்படையிலான பொதுவான பலன்கள் மட்டுமே. முக்கியமான வாழ்க்கை, நிதி அல்லது உடல்நல முடிவுகளை எடுக்கும்போது நடைமுறைத் தகவல்களையும் நிபுணர் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்ளவும்.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!