மட்டக்களப்பில் ஐவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிள்ளையானின் விளக்கமறியல் காலத்தை மேலும் நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கில் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!