புதன்கிழமை, 25 நவம்பர் 2026 | 08:38 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
இலங்கை

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம்! – அமைச்சர் எச்சரிக்கை!

ஆயம் செய்திப்பிரிவு 23 நவம்பர் 2026, பி.ப 05:06 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம்! – அமைச்சர் எச்சரிக்கை!

இந்தியாவில் நிலவும் எல் நினோ தொடர்பான காலநிலை மாற்றங்களின் தாக்கம் காரணமாக, இலங்கையில் சில இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நிலவும் எல் நினோ தொடர்பான காலநிலை மாற்றங்களின் தாக்கம் காரணமாக, இலங்கையில் சில இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பைத் தடுப்பது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இதன்போது, இறக்குமதியாளர்கள் மாற்றுச் சந்தைகளை ஆராய்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, காய்ந்த மிளகாய் இறக்குமதியில் ஈரப்பதம் அதிகரித்துள்ளமை சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் தரநிலைகளின்படி, இறக்குமதி செய்யப்படும் காய்ந்த மிளகாயில் ஈரப்பதம் 12 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். எனினும், இந்தியாவில் பெய்துவரும் கடும் மழை மற்றும் எல் நினோ தாக்கம் காரணமாக சில இறக்குமதித் தொகுதிகளில் ஈரப்பதம் 13 முதல் 14 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால், குறித்த காய்ந்த மிளகாய் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.


இந்தப் பிரச்சினை உள்ளூர் சந்தையில் மிளகாய் தட்டுப்பாடு ஏற்பட்டதால் உருவானதல்ல என்றும், தரநிலைகளைப் பூர்த்தி செய்யாத இறக்குமதித் தொகுதிகளை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலே இதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், விநியோகச் சிக்கல்களைப் பயன்படுத்தி வியாபாரிகள் நியாயமற்ற முறையில் விலைகளை அதிகரிக்க முயன்றால், நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் நுகர்வோர் விவகார சபை ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.


தேவை ஏற்பட்டால் அத்தியாவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!