புதன்கிழமை, 25 நவம்பர் 2026 | 05:37 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
இலங்கை

கடுவெல மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் தீப்பரவல் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி!

ஆயம் செய்திப்பிரிவு 19 நவம்பர் 2026, பி.ப 12:32 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
கடுவெல மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் தீப்பரவல் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி!

கடுவெல நகரில் இன்று (19) காலை மின்சாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு சிறு பிள்ளைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கடுவெல நகரில் இன்று (19) காலை மின்சாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு சிறு பிள்ளைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்தவர்கள் தந்தை, தாய் மற்றும் அவர்களது 2 மற்றும் 6 வயதுடைய இரண்டு பிள்ளைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் தரைத்தளத்தில் மின்சாதனப் பொருட்கள் விற்பனை நிலையம் அமைந்திருந்ததுடன், அதன் மேல் மாடியில் குறித்த குடும்பத்தினர் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கோட்டை தீயணைப்புப் படையிலிருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.


எனினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மேலதிக தகவல்களும் வெளியாகவில்லை.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!