வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2026 | 11:47 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
வேலைநிறுத்தம் செய்தாலும் பலனில்லை! தொழிற்சங்கங்களுக்கு ஜனாதிபதி வைத்த செக்!
இலங்கை

அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! வெளியானது அறிவிப்பு!

ஆயம் செய்திப்பிரிவு 27 நவம்பர் 2026, பி.ப 04:50 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! வெளியானது அறிவிப்பு!

நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (27) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (27) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.


இதற்கமைய, மிகவும் வறிய பிரிவைச் சேர்ந்த 381,369 குடும்பங்களுக்கும், வறிய பிரிவைச் சேர்ந்த 635,761 குடும்பங்களுக்கும் என மொத்தம் 1,017,130 குடும்பங்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.


இதற்காக 12,142,055,250 ரூபா (12.14 பில்லியன் ரூபா) நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் அவசர நிவாரண கொடுப்பனவை வழங்க கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி அமைச்சரவை தீர்மானித்திருந்தது.


அதன்படி, மிகவும் வறிய பிரிவினருக்கு வழங்கப்படும் மாதாந்த அஸ்வெசும கொடுப்பனவான 17,500 ரூபாவுக்கு மேலதிகமாக 3,000 ரூபாவும், வறிய பிரிவினருக்கு வழங்கப்படும் 10,000 ரூபாவுக்கு மேலதிகமாக 2,000 ரூபாவும் இந்த மாதம் வழங்கப்படவுள்ளது.


இந்த அவசர நிவாரணத்திற்காக அரசாங்கம் 2,415,629,000 ரூபா (2.41 பில்லியன் ரூபா) நிதியை ஒதுக்கியுள்ளது.


மேலும், இந்த மேலதிக நிவாரணக் கொடுப்பனவு நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!