இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 27) பவுண் ஒன்றுக்கு 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நேற்று (26) 343,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை, இன்று 3,000 ரூபாய் அதிகரித்து 346,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 346,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 318,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, ஒரு கிராம் 24 கரட் தங்கம் 43,250 ரூபாயாகவும், ஒரு கிராம் 22 கரட் தங்கம் 39,788 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!