ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2026 | 12:49 AM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஹைப்பர்சோனிக் Zircon ஏவுகணைகளை ஏந்திச் செல்லக்கூடிய புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான Perm-ஐ நவம்பர் 27ஆம் திகதி ரஷ்ய கடற்படையில் இணைத்தார்.
வேலைநிறுத்தம் செய்தாலும் பலனில்லை! தொழிற்சங்கங்களுக்கு ஜனாதிபதி வைத்த செக்!
உலகம்

Operation Bear Trap | கரடி பொறி தாக்குதல்

க. இளங்கோவன் 28 நவம்பர் 2026, மு.ப 05:33 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
war war

யுக்ரைனின் வடக்கு கார்கிவ் (Kharkiv) பகுதியில் ரஷ்யப் படைகளுக்கு எதிராக யுக்ரைன் ‘Operation Bear Trap’ என்ற புதிய இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

யுக்ரைனின் வடக்கு கார்கிவ் (Kharkiv) பகுதியில் ரஷ்யப் படைகளுக்கு எதிராக யுக்ரைன் ‘Operation Bear Trap’ என்ற புதிய இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

- இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 200 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும் 14 குடியிருப்புப் பகுதிகளையும் மீட்டுள்ளதாக யுக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.


- ரஷ்யப் படைகளின் சுற்றிவளைப்புத் திட்டத்தை முறியடிக்க, தாங்கிகள், ஆளில்லா விமானங்கள் (Drones) மற்றும் தந்திரோபாயத் தாக்குதல்களை யுக்ரைன் பயன்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், 2026,நவம்பர் 24ஆம் திகதி வரை ரஷ்யப் படைகளின் மொத்த உயிரிழப்புகள் 432,519 என யுக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.


அத்துடன், நவம்பர் மாதத்தில் மட்டும் 55,629 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவும் யுக்ரைய்ன் கூறியுள்ளது. .


-இதற்கிடையில், யுக்ரைன் தனது டொனெட்ஸ்க் பாதுகாப்புப் பகுதிகளை ரஷ்யாவிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது நேட்டோ உறுப்புரிமை தொடர்பில் சமரசம் செய்ய வேண்டும் என அமெரிக்கா முன்வைத்துள்ள அமைதித் திட்டங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.


-போர்நிறுத்தத்திற்குப் பதிலாக யுக்ரைனுக்கு நேட்டோவின் Article 5 அடிப்படையிலான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவது குறித்தும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


ஆனால், ரஷ்யாவுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் யுக்ரைனுக்குச் சாதகமாக இல்லை என ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.


இதேவேளை, யுக்ரைன், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எரிபொருள் கட்டமைப்புகள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.


யுக்ரைனின் தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்புத் திறன் சுமார் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாகவும், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.



க. இளங்கோவன்

க. இளங்கோவன்

முதன்மை ஆய்வாளர்

இலங்கை அரசியல் மற்றும் சர்வதேச விவகார ஆய்வாளர்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!