அக்வான் புயல் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது சென்னையிலிருந்து சுமார் 580 கிலோமீட்டர் தொலைவில் இந்தப் புயல் மையம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரசாபூர் மற்றும் பூரி ஆகிய பகுதிகளுக்கு இடையே நாளை (20) புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!