செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 05:19 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
இலங்கை

பிற்பகல் 2 மணிக்குப் பின் வானிலையில் ஏற்படக்கூடிய மாற்றம்! விசேட அறிவுறுத்தல்!

ஆயம் செய்திப்பிரிவு 22 நவம்பர் 2026, மு.ப 10:23 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
பிற்பகல் 2 மணிக்குப் பின் வானிலையில் ஏற்படக்கூடிய மாற்றம்! விசேட அறிவுறுத்தல்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பல தடவைகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பல தடவைகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவிலான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!