செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 05:19 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
இலங்கை

சிறுவர்களுக்கு 20 நிமிடங்கள் மட்டுமே கைத்தொலைபேசி! வைத்தியர்களின் அதிரடி எச்சரிக்கை!

ஆயம் செய்திப்பிரிவு 22 நவம்பர் 2026, மு.ப 11:52 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
சிறுவர்களுக்கு 20 நிமிடங்கள் மட்டுமே கைத்தொலைபேசி! வைத்தியர்களின் அதிரடி எச்சரிக்கை!

சிறுவர்கள் நாளொன்றுக்கு அதிகபட்சம் 20 நிமிடங்கள் மாத்திரமே டிஜிட்டல் திரைகளைக் கொண்ட இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என பேராதனை மருத்துவமனையின் மனநல வைத்திய நிபுணர் டொக்டர் சயுரி பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் நாளொன்றுக்கு அதிகபட்சம் 20 நிமிடங்கள் மாத்திரமே டிஜிட்டல் திரைகளைக் கொண்ட இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என பேராதனை மருத்துவமனையின் மனநல வைத்திய நிபுணர் டொக்டர் சயுரி பெரேரா தெரிவித்துள்ளார்.


கண்டி மஹிந்த ராஜபக்ஷ உள்ளக அரங்கில் நேற்று (21) நடைபெற்ற EXCLE Montessori School இன் வருடாந்த சிறுவர் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


கைத்தொலைபேசி, தொலைக்காட்சி மற்றும் கணினி உள்ளிட்ட டிஜிட்டல் திரைகளைக் கொண்ட சாதனங்களைப் பயன்படுத்துவதில் சிறுவர்களுக்கு பெற்றோர் உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


சிறுவர்கள் மத்தியில் ஆரம்பத்தில் சிறிய பிரச்சினையாகக் காணப்பட்ட டிஜிட்டல் திரைப் பயன்பாடு, தற்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன், தொற்றுநோய் போன்ற நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், பெற்றோரின் கண்காணிப்பின்றி சிறுவர்களிடம் கைத்தொலைபேசிகளை வழங்க வேண்டாம் எனவும், குறிப்பாக இணைய வசதியுடன் கூடிய கைத்தொலைபேசிகளை வழங்குவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.


சமூக வலைத்தளங்களில் காணப்படும் உள்ளடக்கங்கள் சிறுவர்களின் பார்வைக்குச் செல்லாத வகையில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் எனவும், 16 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கு கைத்தொலைபேசிகளை வழங்குவதைத் தவிர்க்குமாறு மனநல வைத்திய நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


அத்துடன், சிறுவர்களை டிஜிட்டல் திரைகளிலிருந்து விலக்கி, விளையாட்டு மற்றும் கலைச் செயற்பாடுகளில் அதிகளவில் ஈடுபடுத்துவதற்கு பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!