2026ஆம் ஆண்டிற்கான சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர் (உள்நாட்டு மொழிகள்) பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பரீட்சை கொழும்பு 10, ஆனந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் நேர அட்டவணையை www.moj.gov.lk என்ற அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை சிங்களம் – ஆங்கிலம் மற்றும் சிங்களம் – தமிழ் ஆகிய மொழி இணைப்புகளுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்காகவே இந்தப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!