இலங்கையில் முறையான மருத்துவத் தகுதிகள் இல்லாத சுமார் 40,000 பேர் மருந்துகளை விநியோகித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் சங்கம் (AMS) தெரிவித்துள்ளது.
இதனால் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என சங்கத்தின் தலைவர் ருவான் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.
தகுதியற்ற நபர்கள், மருந்தகங்களில் பணியாற்றிய அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மருத்துவர்களின் ஆலோசனையின்றி நோயாளிகள் தாங்களாகவே நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை (Antibiotics) பெற்றுக்கொள்வதும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக மருந்து எதிர்ப்புத் திறன் (Antimicrobial Resistance) அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு மட்டுமே மேற்கத்திய மருத்துவ முறையிலான மருந்துகளைப் பரிந்துரைப்பதற்கு சட்ட அங்கீகாரம் உள்ளதாக ருவான் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால், எதிர்காலத்தில் தொற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் செயலிழக்கும் அபாயம் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!