செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 05:19 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
இலங்கை

கண்டி, கேகாலை, நுவரெலியா மாவட்ட மக்களே எச்சரிக்கை! நாளை அதிகாலை 5 மணி வரை அபாயம்!

ஆயம் செய்திப்பிரிவு 21 நவம்பர் 2026, மு.ப 11:50 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
கண்டி, கேகாலை, நுவரெலியா மாவட்ட மக்களே எச்சரிக்கை! நாளை அதிகாலை 5 மணி வரை அபாயம்!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI), மூன்று மாவட்டங்களிலுள்ள மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI), மூன்று மாவட்டங்களிலுள்ள மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.


இந்த எச்சரிக்கைகள் நாளை (22ஆம் திகதி) அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கண்டி மாவட்டம் – யட்டிநுவர (Yatinuwara, கேகாலை மாவட்டம் – மாவனெல்ல (Mawanella) ஆகிய இடங்களுக்கு அம்பர் நிற எச்சரிக்கை (Amber Level) விடுக்கப்பட்டுள்ளது


நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ (Ambagamuwa) பகுதிக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை (Yellow Level) விடுக்கப்பட்டுள்ளது


தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக குறித்த பகுதிகளில் மண்சரிவு, மலைச்சரிவு, பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் நிலம் தாழிறங்குதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.


எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!