செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 05:19 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் பரபரப்பு! இரவு நேரத் தாக்குதலில் சிக்கிய 5 மாணவர்கள் – 21 பேருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

ஆயம் செய்திப்பிரிவு 21 நவம்பர் 2026, மு.ப 11:51 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
யாழ். பல்கலைக்கழகத்தில் பரபரப்பு! இரவு நேரத் தாக்குதலில் சிக்கிய 5 மாணவர்கள் – 21 பேருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி, வெட்டுக் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி, வெட்டுக் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் மீது, கடந்த 19ஆம் திகதி இரவு சக மாணவர்கள் சிலர் இணைந்து கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது அவர்களுக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளன.


இதனையடுத்து காயமடைந்த ஐந்து மாணவர்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, விரைந்து செயற்பட்ட காவல்துறையினர் தாக்குதல் நடத்தி காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவரையும், பொது இடத்தில் கைகலப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 20 பேரையும் என மொத்தம் 21 மாணவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், கைது செய்யப்பட்ட 21 மாணவர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.


இதேவேளை, இந்தக் குழு மோதலில் ஈடுபட்ட ஏனைய மாணவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!