செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 04:23 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
உலகம்

தந்தைக்காக சிறிய சவப்பெட்டி தயாரித்த 7 வயது சிறுவன் : பின்னணி என்ன?

ஆயம் செய்திப்பிரிவு 19 நவம்பர் 2026, பி.ப 02:01 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
தந்தைக்காக சிறிய சவப்பெட்டி தயாரித்த 7 வயது சிறுவன் : பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன், தனது தந்தைக்காக காகிதங்களைக் கொண்டு சிறிய சவப்பெட்டி மற்றும் மலர் வளையங்களைத் தயாரித்து வருவது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன், தனது தந்தைக்காக காகிதங்களைக் கொண்டு சிறிய சவப்பெட்டி மற்றும் மலர் வளையங்களைத் தயாரித்து வருவது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.


Wang (வாங்) எனும் குறித்த சிறுவன், விளையாட்டாக காகிதங்களைக் கொண்டு சவப்பெட்டிகள், மலர் வளையங்கள், காகிதக் கோபுரங்கள் மற்றும் விலங்கு உருவங்களைக் கொண்ட படையல்கள் உள்ளிட்ட இறுதிச்சடங்கிற்குத் தேவையான பொருட்களைத் தனது கைகளால் உருவாக்கி வருகின்றான்.


சிறுவனின் தாயான Ma (மா), தனது மகனின் இந்த வித்தியாசமான பொழுதுபோக்கு குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


சிறுவனுக்கு நான்கு வயதாக இருந்தபோது, இறுதிச்சடங்கு நிகழ்வொன்றுக்கு அவனை அழைத்துச் சென்றதன் பின்னரே இந்த ஆர்வம் அதிகரித்துள்ளதாகத் தாய் தெரிவித்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து, இறுதிச்சடங்கு நடத்துபவரைப் போலவும் சிறுவன் செயல்பட்டு வருகின்றான். இரங்கல் வாசகங்களை உச்சரிப்பது, இறந்தவரின் முன்பாக நின்று பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் 'Ku Ling' சடங்கைச் செய்வது மட்டுமன்றி, பெற்றோரின் கைத்தொலைபேசிகளில் இறுதிச்சடங்கு இசையையும் ஒலிக்கச் செய்கின்றான்.


சில நேரங்களில் Lego கற்களைப் பயன்படுத்தியும் இறுதிச்சடங்கு தொடர்பான அமைப்புகளை உருவாக்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஒருமுறை சிறுவனின் ஓவியப் புத்தகம் முழுவதும் மலர் வளையங்களின் ஓவியங்களால் நிரப்பப்பட்டிருந்ததாக ஆசிரியர் பெற்றோரிடம் தெரிவித்திருந்தார்.


இதன் பின்னரே பெற்றோர்கள் சிறுவனின் இந்தப் பொழுதுபோக்கை முழுமையாக அறிந்துகொண்டுள்ளனர். இருப்பினும், இதனை அபசகுணமாகக் கருதாமல், அவனது ஆர்வத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர்.


சிறுவன் தயாரிக்கும் சவப்பெட்டியில் அவரது தந்தை இறந்தவர் போன்று நடித்துக்கொள்வதாகவும், தந்தையை வைத்தே சிறுவன் இறுதிச்சடங்கு நிகழ்வுகளைப் பயிற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.


சிறுவனின் தாத்தா, பாட்டியும் இதனை அபசகுணமாகக் கருதாமல், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான பொழுதுபோக்கு இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.


குறிப்பாக, பெற்றோரின் உதவியின்றி கைத்தொலைபேசி மூலம் காணொளிகளைப் பார்த்தே சிறுவன் இந்தப் பொருட்களைத் தயாரிக்கக் கற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


தெருவோர வியாபாரியான சிறுவனின் தாய், தன்னுடன் மகனை அழைத்துச் செல்லும் சந்தர்ப்பங்களிலும் அவன் இந்த விளையாட்டைத் தொடர்வதாகவும், இதனைப் பார்க்கும் ஏனைய வியாபாரிகள் சிலர் எரிச்சலடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


எதிர்காலத்தில் இறுதிச்சடங்கு துறையில் பணியாற்றப் போவதாகவும் சிறுவன் தனது தாயிடம் தெரிவித்துள்ளான்.


சிறுவனின் இந்த வித்தியாசமான ஆர்வம் குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

குறிச்சொற்கள்: #சர்வதேசம்
ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!