மேல் மாகாணத்தில் வாகன வருமான வரிப் பத்திர விநியோகம் உள்ளிட்ட இணையச் சேவைகள் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 23ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் வருமான வரிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டிய வாகன உரிமையாளர்கள், நவம்பர் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை அபராதமின்றி தமது வருமான வரிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!