இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (18) 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நேற்று (17) 358,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண், இன்று 355,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 326,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 40,825 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!