செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 05:19 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
இலங்கை

யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் மிக மோசம்! பல பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ஆயம் செய்திப்பிரிவு 19 நவம்பர் 2026, பி.ப 12:38 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் மிக மோசம்! பல பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளதுடன், அங்கு காற்றின் தரச் சுட்டெண் (AQI) 200ஐத் தாண்டிப் பதிவாகியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளதுடன், அங்கு காற்றின் தரச் சுட்டெண் (AQI) 200ஐத் தாண்டிப் பதிவாகியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.


இன்று (19) காலை 7.15 மணிக்குப் பதிவான அளவீடுகளின்படி, நாட்டின் பல பகுதிகளிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதுடன், பல இடங்களில் காற்றின் தரச் சுட்டெண் 150ஐ விட அதிகமாகப் பதிவாகியுள்ளது.


மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தரவுகளின்படி, ஏனைய பகுதிகளில் அதிகபட்சமாக பத்தரமுல்லையில் 179 ஆகவும், சிலாபத்தில் 164 ஆகவும், கிளிநொச்சியில் 158 ஆகவும், அனுராதபுரத்தில் 157 ஆகவும், மன்னாரில் 155 ஆகவும், திருகோணமலையில் 151 ஆகவும் காற்றின் தரச் சுட்டெண் பதிவாகியுள்ளது.


மேலும், அக்கரைப்பற்றில் 148, கண்டியில் 147, எல்லையில் 129 மற்றும் இரத்தினபுரியில் 115 ஆகவும் காற்றின் தரச் சுட்டெண் அளவிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், காற்று மாசுபாடு அதிகரித்துக் காணப்படும் காலப்பகுதியில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


குறிப்பாகச் சிறுவர்கள், முதியவர்கள், சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏனைய உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!