செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 04:12 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
உலகம்

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மாரடைப்பால் காலமானார்!

ஆயம் செய்திப்பிரிவு 19 நவம்பர் 2026, பி.ப 06:01 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மாரடைப்பால் காலமானார்!

கொளத்தூர் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு இன்று (நவம்பர் 19) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 75.

கொளத்தூர் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு இன்று (நவம்பர் 19) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 75.


திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ். பாபு. இவரது வெற்றி தமிழக அரசியல் வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.


கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு எக்மோ (ECMO) சிகிச்சையும் வழங்கப்பட்டிருந்தது.


சுமார் 70 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று பிற்பகல் 2.24 மணியளவில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என கட்சித் தொண்டர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவரது மறைவு தவெக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தவெக தலைவர் விஜய், வி.எஸ். பாபுவின் மறைவையடுத்து மருத்துவமனைக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!